ரோட்ரிகோ கேபிரியலா: ஒரு அருமையான கிட்டார் இசை நிகழ்ச்சி

TED2015

ரோட்ரிகோ கேபிரியலா: ஒரு அருமையான கிட்டார் இசை நிகழ்ச்சி

March 16, 2015


கிட்டார் இசை கலைஞர்கள் ரோட்ரிகோ மற்றும் கேபிரியலா தங்கள் "த சவுண்ட்மேக்கர்" என்கிற பாடலுக்கு பல வகையான சிலிர்ப்பூட்டும் மெட்டுக்களில் புது வகையான ஸ்டைலில் இசைக்கின்றனர்.

ஜில் ஹிக்ஸ்: பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.

TEDxSydney

ஜில் ஹிக்ஸ்: பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.

May 24, 2016


கலவரமும் வெறுப்புணர்வும் மூட்டிய தீயின் சாம்பலிலிருந்து மீண்டெழுந்த கருணை, மனிதம் ஆகியவற்றின் கதையே ஜில் ஹிக்ஸ் அவர்களின் கதை. ஜூலை 7, 2005, அன்று லண்டன் நகரில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த அவர், அந்நாளின் நிகழ்வுகள் பற்றியும், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில் தான் கற்ற பாடங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.

சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்

TED@BCG Paris

சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்

May 18, 2016


சீமா பன்சால், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 15000 பள்ளிகளில், பொது கல்வித்துறையை சீர்திருத்த லட்சிய இலக்கை வைத்தார். 2020 ஆம் ஆண்டிற்குள், 80 சதவிகித மாணவர்கள் தகுதிப்படி அறிவை கொண்டிருப்பார்கள். இந்த லட்சியத்தினை கூடுதல் வளங்கள் இல்லாமல் செய்து முடித்து, சீர்திருத்தம் கொண்டுவரவே அவர் எண்ணுகிறார். பன்சால் மற்றும் அவரது குழுவினர், நேர்பட, புது யுக்திகளான குறுந்செய்தி, குழு பகிர்தல் போன்றவற்றின் மூலம் வெற்றி காண்கின்றனர். மேலும், ஏற்கனவே, ஹரியானாவில் மாணவர்கள் கற்கும் மற்றும் ஈடுபாட்டு அளவில் முன்னேற்றத்தை அளந்துள்ளனர்.

ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல

TED2016

ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல

February 17, 2016


பெண்களை நேர்த்தியாகவும், ஆண்களை வீரமாகவும் வளர்க்கிறோம் என்று ரேஷ்மா சாஜானி, Girls Who Code நிறுவனர் சொல்கிறார். வாலிப பெண்கள் எப்படி அபாயங்களை எதிர்க்கொண்டு ப்ரோக்ராம் செய்ய அறிந்து கொள்வதை பற்றி அறிவிக்கிறார். அவர், "குறைகளில் உள்ள நிறைவை எப்படி இளம் பெண்களுக்கு ஒவ்வொருவரும் சொல்லவேண்டும்." என்கிறார்.

சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்

TED@BCG London

சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்

June 30, 2015


உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. விஞ்ஞானி சாமுவேல் கோஹென் அல்சைமர் ஆராய்ச்சியில் நம்பிக்கை தரும் ஒரு புதிய திருப்புமுனையைப் பகிர்ந்துகொள்கிறார். கோஹன் கூறுகிறார், " அல்சைமர் ஒரு நோய்", "அதை நாம் குணப்படுத்த முடியும். "

சல்வடோரே யாகோனேசி: என் மூளைப் புற்று நோயை வெளிப்படுத்திய போது என்ன நடந்தது?

TEDMED 2013

சல்வடோரே யாகோனேசி: என் மூளைப் புற்று நோயை வெளிப்படுத்திய போது என்ன நடந்தது?

June 9, 2013


ஓவியர் சல்வடோரே யாகோனேசிக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அவர் செயலற்று இருக்க மறுத்துவிட்டார். அதாவது 'காத்திருப்பவனாக' (Patient ). அவர் தனது மூளை ஸ்கேன்களை இணையத்தளத்தில் வெளியிட்டு உலக மக்களிடம் அதற்கான சிகிச்சையைக் கோரினார். அரை மில்லியனிலும் அதிகமான மக்களிடமிருந்து மருத்துவ ஆலோசனைகள், ஓவியம், இசை, மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெற்றார்.

லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை

TEDWomen 2015

லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை

May 28, 2015


தனித்துவம் மற்றும் நிலை மாற்றம் பற்றி கவிதை மூலம் நடத்தும் இந்த ஆய்வில் " நான் என் உடலின் ஒரு புதிர், கேட்கப்பட்டு பதில் தரப்பட்டாத ஒரு கேள்வியாய் இருந்தேன்" என்கிறார் , TED பட்டதாரியும் கவிஞருமான லீ மொகோபே. உடல்கள் மற்றும் அவை பற்றி கூறப்படும் கருத்துகள் பற்றி சிந்தனையைத் தூண்டும் ஒரு பரிமாற்றம்.

டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது

TED2015

டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது

March 25, 2015


மனிதர்களாகிய நாம் " விஷயங்கள் இருக்கும் விதத்திற்கு" வேகமாகப் பழகிப் போய் விடுகிறோம். ஆனால் டிஸைனர்களுக்கு, இப்பொழுது விஷயங்கள் இருக்கும் விதம் ஒரு வாய்ப்பு .... இவைகளை மேம்படுத்த முடியுமா? எப்படி? இந்த வேடிக்கையான, குளு குளுவென்ற சொற்பொழிவில், IPOD மற்றும் Nest வெப்ப மானி உருவாகக் காரணமாயிருந்த இவர் கவனிப்பதற்கும் - மேலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் - சில சிற்றாலோசனைகள் வழங்குகிறார்.

ஜாய் அலெக்ஸாண்டர்: பழங்கால ஜாஸ் இசையமைக்கும் ஒரு 11 வயது மேதை

TED2015

ஜாய் அலெக்ஸாண்டர்: பழங்கால ஜாஸ் இசையமைக்கும் ஒரு 11 வயது மேதை

March 25, 2015


ஒரு இளம் வாலிபனிடமிருந்து எதிர்பாராத கூர்மையான நவீன பியானோ ஜாஸ் வாசிக்கும் தனது தந்தையின் பழைய பதிவுகளை கேட்டு வளர்ந்த ஜாய் அலெக்ஸாண்டர். ஒரு 11 வயது நிரம்பிய இளம் வாலிபனுடைய சிறப்பான திலோனியள் மாங்க் கிலாசிகை சிறப்பாய் வாசிப்பதை TED கூட்டத்துடன் கேளுங்கள்.

பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.

TED2015

பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.

March 19, 2015


பில் கிராஸ் அனேக முதல் முயற்சி நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளார்.மற்றும் பலவற்றை அடைகாத்து வளர்த்துள்ளார். ஏன் சில வெற்றி பெற்றன, ஏன் சில தோல்வியடைந்தன என்பதை அறிய ஆவல் கொண்டார். அதனால் தன்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நூற்றுக் கணக்கான கம்பெனிகளிடமிருந்து தகவல்கள் சேகரித்தார். .ஐந்து முக்கிய தன்மைகளின் படி அவைகளை வரிசைப் படுத்தினார். மற்ற காரணங்களிடமிருந்து தனித்து நின்ற ஒரு காரணம் அவரையுமே ஆச்சரியத்திலாழ்த்தியது.

பெல் பெஸ்ஸி: உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்

TEDGlobal 2014

பெல் பெஸ்ஸி: உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்

October 7, 2014


நாங்கள் அனைவரும் இன்றியமையாத மற்றும் ஒட்டுமொத்த விளைவு மாற்ற திறன் கொண்ட உற்பத்தியை உருவாக்க, வெற்றிகரமான நிறுவனத்தை ஆரம்பிக்க, சிறந்த விற்பனையாகும் புத்தகத்தை எழுத ஆசைப்படுகிறோம். ஆனால் தற்போதுவரை எம்மில் ஒரு சிலரே அதை உண்மையில் செய்கிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த தொழிலதிபர் பெல் பெஸ்ஸி என்பவர் உங்களது கனவுத் திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்ற உறுதிப்பாட்டை இலகுவாக நம்பக்கூடிய ஐந்து கதைகளால் வேறு பிரிக்கிறார்.

ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது

TEDMED 2014

ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது

September 9, 2014


விளக்கம் (AUTISM)ஆடிஸமுள்ள , துணிவும் துடிப்பும் கொண்ட 16 வயதான ரோஸி கிங்க் கூறுகிறாள்: " வகைகளில் பல இருப்பது மக்களுக்கு மிகுந்த பயமளிப்பதால் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய பெட்டியில் போட்டுக் குறியிட முயலுகிறார்கள்". அவள் கேட்கிறாள்:ஏன் எல்லோரும் இயல்பாக இருக்க வேண்டுமென்று அவ்வளவு கவலைப் படுகிறார்கள்? ஒவ்வொரு குழந்தைக்கும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியருக்கும் , மற்றவர்களுக்கும் தனித்துவத்தைக் கொண்டாட அறைகூவல் விடுக்கிறாள்.மனிதனின் பல்வகைத் திறைமைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த பிரகடனம்.

டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.

TEDMED 2014

டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.

September 10, 2014


டெப்ரா ஜார்விஸ் மருத்துவமனையில் புரோகிதையாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் பணியாற்றி வருகையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நோயாளியாக அவர் நிறையக் கற்றுக் கொண்டார். நகைச்சுவையுடன் கூடிய ஒரு துணிவான சொற்பொழிவில் அவர் எப்படி "புற்று நோயிலிருந்து பிழைத்தவர்" என்ற அடையாளம் நம்மைச் சிறைப்பட்டவராக உணர வைக்கலாம் என்பதை விளக்குகிறார். நம்முடைய கடுமையான அனுபவங்கள் நம் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி தரும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்று என்று கூறுகிறார்.

கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை

TEDMED 2014

கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை

September 15, 2014


2011ல் ரோனி கஹானா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் சிறை வைக்கப்பட்டவர் போலானார்.;கண்களைத் தவிர முழுவதுமாக செயலிழந்தார்.சாதாரணமாக ஒரு மனிதனின் மன நிலையை இது குலைத்துவிடுமானுலும் கஹானோவோ "வெளி அரவங்கள் ஒடுங்கும்போது" ஒரு அமைதியைக் கண்டார்..மேலும் புதிய உடல் மற்றும் வாழக்கையுடன் காதல் கொண்டார்..இந்த சோகமான உணர்ச்சிகரமான சொற்பொழிவில், அவரது மகள் கித்ரா, தன்னுடைய செயலிழந்த நிலையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டி உதவிய தன் தந்தையின் ஆன்மீக அனுபவத்தை எப்படிப் பதிந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்தி

TED@Unilever

மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்தி

September 10, 2014


மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.

கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்து

TED@NYC

கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்து

July 8, 2014


"நாம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவே அதிக நேரத்தை செலவிடுகிறோம் அவர்கள் என்ன சொல்லவில்லை என்பதை மிக அரிதாகவே கவனிக்கிறோம்" என்று புரட்சிக் கவிஞரும் ஆசிரியருமான கிளின்ட் ஸ்மித் கூறுகிறார். அறியாமை மற்றும் அநீதிக்கு எதிராக பேசுவதற்கான தைரியத்தை கண்டுகொள்ள இதயத்திலிருந்து வரும் குறுகிய, சக்திவாய்ந்த பேச்சாகும்.

கேரன் எளாசாரி: ஹேக்கர்கள் : இணையத்தின் நோய் எதிர்ப்பு சக்தி

TED2014

கேரன் எளாசாரி: ஹேக்கர்கள் : இணையத்தின் நோய் எதிர்ப்பு சக்தி

March 18, 2014


ஹேக்கர்களின் சிறப்பு என்ன என்பதை பற்றி மின்வெளி பாதுகாப்பு அதிகாரி கேரன் எளாசாரி விவரிக்கின்றார். ஏக்கர்கள் இணையத்தையும் அதனை பயன்படுதுகின்றவர்களையும் மேம்படுத்த உதவுகின்றனர். சில ஹேக்கர்கள் தவறானவர்கள்தான் ஆனால் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து போராடுகின்ற அதே வேளையில் நமது உரிமைகளுக்கும் குரல் வெளிக்கொடுக்கின்றனர். பலவீனத்தை வெளிப்படுத்துவதின் வழி அவர்கள் இணையத்தை சக்தி வாய்ந்த ஊடகமாக மாற்றி உலக ஏற்றத்திற்கு வித்திடுகின்றனர்

ரே கர்ச்வீல்: கலப்பின சிந்தனைக்கு தயாராகுங்கள்

TED2014

ரே கர்ச்வீல்: கலப்பின சிந்தனைக்கு தயாராகுங்கள்

March 20, 2014


200 மில்லயன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாலூட்டி முன்னோர்கள் மூளையில் ஒரு புதிய அம்சம் தோன்ற காரணமாக இருந்தனர் அது தான் புதிய புறணி .தபால் வில்லை அளவே உள்ள இந்த திசு (வாதுமை கொட்டை அளவே உள்ள மூளையை சுற்றி அமைந்திருக்கும் ) தான் இன்று மனித குலம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு மூல காரணி .எதிர்கால கணிப்பாளர் ரே கர்ச்வீல் மூளையின் திறன் குறித்து வரும் காலங்களில் ஏற்படபோகும் மிக பெரிய எழுச்சிக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேக கணினியின் திறனை நமது மூளை நேரடியாக பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொல்கிறார்.

கெவின் ப்ரிக்க்ஸ்: தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்

TED2014

கெவின் ப்ரிக்க்ஸ்: தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்

March 18, 2014


சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம், இங்குதான் சார்ஜன் கேவின் பிரிக்ஸ் அவர்கள் வேலை செய்தார். இவ்விடம் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புகழ் பெற்ற ஓர் இடம். இங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வாழ்வின் விளிம்பில் நிறபவர்களுடன் பேசி அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி  மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்

TED2014

எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்

March 19, 2014


எலிசபெத் கில்பெர்ட் அவர்கள் விருந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த காலத்தில் அவரின் எந்த எழுத்தும் பிரசுரிக்கப் படவில்லை. அது அவருக்கு ஆழமான மனக்கவலையை அளித்தது. Eat, Pray, Love, புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தன்னை தானே அறிந்து கொண்டார். வெற்றியும் தோல்வியைப்போல் தன்னிலை இழக்க வைக்கும் என்றும் ஆயினும் விளைவை பற்றி கவலைக்கொள்ளாமல் தொடர்ந்து செல்வது எப்படி என்று விவரிக்கின்றார்.

TED ஊழியர்: இது TED, இசையில்

TED in the Field

TED ஊழியர்: இது TED, இசையில்

April 1, 2014


உங்களில் TED பேச்சு மறைந்திருக்கிறதா, முன் வர தயக்கமா? இந்த இசையமைப்பில் ஒரு சுற்றுலாவை காணுங்கள். -TED ஊழியர்களால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டு, நடிக்கப்பட்டது

தாள சத்தம்  துடிப்புக்கு பின்னாலுள்ள கணிதம்

TEDYouth 2013

தாள சத்தம் துடிப்புக்கு பின்னாலுள்ள கணிதம்

November 15, 2013


உங்கள் இருக்கைகைளில் இருந்து ஆட விருப்பமா? பறை அடிக்கும் கமரன் கிளைத்டன் உங்களுக்கு சங்கீதத்தின் நுட்பங்களை சொல்கிறார் .ரப் இலிருந்து லத்தின்,பொப் அதன் துடிப்பு வரை விளக்குகிறார் . ஹிப் ஹோப்பும் ஜாசும் கணிதத்டைவிட வேடிக்கையானது !! கணிதத்தில் இலகுவாக தங்கியுள்ளது !!

மார்க் கெண்டால்: பாதுகாப்பான மற்றும் மலிவான  ஊசி இல்லாத தடுப்பு  மருந்து உட்கொள்ளும் முறை.

TEDGlobal 2013

மார்க் கெண்டால்: பாதுகாப்பான மற்றும் மலிவான ஊசி இல்லாத தடுப்பு மருந்து உட்கொள்ளும் முறை.

June 19, 2013


ஊசி மற்றும் இறையை கண்டுபிடித்து நூற்று அறுபது ஆண்டுகள் ஆகியும், நாம் இன்னும் தடுப்பு மருந்து வழங்க அவற்றை பயன்படுத்தி வருகிறோம், இது கண்டுபிடிப்பிற்கான நேரம். உயிர்களில் மருத்துவ பொறியாளர் மார்க் கெண்டல் நமக்கு நானோ பாட்ச் என்னும் ஒரு புதிய மருந்து உட்கொள்ள உதவும் கருவியை பற்றி விவர்கிறார். ஒரு சென்டிமீட்டர்க்கு ஒரு சென்டிமீட்டர் சதுர வடிவை கொண்டது.இது வலி இல்லாத ஒரு முறையாகும். இந்த் கண்டுபிடிப்பு இப்போது நாம் பயன்படுத்தும் ஊசியின் நான்கு பெரும் குறைபாடுகளை வெல்ல மிகவும் மலிவான விலையில் உதவுகிறது,

எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள்

TEDWomen 2013

எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள்

December 5, 2013


தனது 64 வயதில், தொடர்ந்து 53 மணி நேரம் நீச்சலிடித்துகொண்டே, கியூபா முதல் ப்ளோரிடா மாகாணம்வரை சென்று சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை...

டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்

TEDGlobal 2013

டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்

June 25, 2013


எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக ஒன்று உள்ளது என்றால், அது ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே என்று ஒரு துறவி மற்றும் மதநல்லிணக்க அறிஞர், சகோதரர் டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட் கூறுகிறார். மேலும், அவர் பரிந்துரைக்கும் இந்த சந்தோஷம் நன்றியுள்ள தன்மைவிலிருந்து வருவது.

ஜாரெட் டியமண்ட்: சமூகங்கள் இன்னும் சிறப்பான முறையில் எப்படி மூப்படையலாம்?

TED2013

ஜாரெட் டியமண்ட்: சமூகங்கள் இன்னும் சிறப்பான முறையில் எப்படி மூப்படையலாம்?

March 14, 2013


மனித வாழ்நாட்களை நீடிக்கும் நமது சமீபத்திய முயற்சியில் ஒரு எதிர்பொருள் கொள்ள வேண்டிய பாவனை உள்ளது .இளைஞர்ககளை சார்ந்த ஒரு சமுதாயத்தில் வயதானவர்கள் வாழ்வது உல்லாச பயணம் போவது போன்றது அல்ல .வயதானவர்கள் தனிமைபடுத்தபடலாம் ,வேலையின்மை நிதி பற்றாக்குறை போன்றவைகளும் ஏற்படலாம் .ஆவலை தூண்டும் இந்த சொற்பொழிவில் ஜாரெட் டியமண்ட் பல சமூகங்களில் வயதானவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்த அவரது பார்வையில் அலசுகிறார்.சில நன்றாக உள்ளது சில மோசமாக உள்ளது . ஆனால் வயதானவர்களின் அனுபவ அறிவை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்டீபன் லார்சென்: மருத்துவர்கள் சக மருத்துவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்

TED@BCG Singapore

ஸ்டீபன் லார்சென்: மருத்துவர்கள் சக மருத்துவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்

October 10, 2013


வெவ்வேறு மருத்துவமனைகள் வெவ்வேறு விதமான செயமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் நோயாளிகளுக்கு தெரிவதில்லை தரவுகளை பார்ப்பதும் அறுவை சிகிச்சை நிபுணரை தேர்ந்தெடுப்பதும் பணய தொகை அதிகமாக உள்ள ஒரு அனுமானிப்பு விளையாட்டு போல என்பது .ஸ்டீபன் லார்சென், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவர்களது சிகிச்சை முறைகளின் தரத்தையும் பலன்களையும் பகிர்ந்து கொண்டால் எடுத்துகாட்டாக எந்த உத்தி அதிக பலன் அளிக்கக்கூடியது என்பது போன்றவைகள் .உடல் நல பராமரிப்பு இன்னுமும் முன்னேறலாமா ,செலவுகள் இன்னமும் குறையலாமா ,மருத்துவர்கள் சக மருத்துவர்களிட இருந்து கற்று கொண்டால் ,அதாவது ஒரு தொடர் மீள்தரவு வளையம் மூலம்?

க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்

TEDCity2.0

க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்

October 11, 2013


பார்வையற்றவர்களுக்கான ஒரு நகர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? க்றிஸ் டவுனி ஒரு கட்டிட கலைஞர். திடீரென்று 2008ல் அவர் பார்வை இழந்தார். பார்வை இழந்த பின்பு சான் பிரான்சிஸ்கோவில் அவர் வாழ்ந்ததை பார்வை இருந்த நேரத்தில் நடந்தவைகளோடு ஒப்பிடுகிறார். சிறந்த வடிவமைப்புகள் எப்படி அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது என்று சொல்கிறார். பார்வை இருக்கிறதோ இல்லையோ சிறந்த வடிவமைப்புகள் எப்படி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று சொல்கிறார்.

ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்

TEDGlobal 2013

ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்

June 12, 2013


கணிதம் என்பது தர்க்கரீதியான செயல்பாட்டுக்கு உதவும் ஒரு அற்புதம் ஆகும். கணித மேதை 'ஆதர் பெஞ்ஜமின்', ஃபிபோனாச்சி எண்களில் ஒளிந்துள்ள அற்புதமான பண்புகளை ஆராய்கிறார். (கணிதம் என்பது ஊக்கமளிக்கும் ஒரு சக்தி என்பதை உணர்த்துகிறார்)

மிக்கோ ஹைப்போனென்: NSA எப்படி உலக நம்பிக்கைக்கு  துரோகம் செய்தது  -- இது செயல்படவேண்டிய நேரம்

TEDxBrussels

மிக்கோ ஹைப்போனென்: NSA எப்படி உலக நம்பிக்கைக்கு துரோகம் செய்தது -- இது செயல்படவேண்டிய நேரம்

October 28, 2013


சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா, வெளிநாட்டினர் மீது செய்யும் பொதுப்படையான கண்காணிப்புகளை அடிகோடிட்டு காண்பித்தது. எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்க்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார் . Miko Hypponen சொல்கிறார் இதன் பொருள் என்னெவென்றால் உலகளவில் இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறார்கள் என்பது தான்: உலகின் தகவல் பரிமாற்ற தேவைகளுக்கு அமெரிக்காவை தவிர்த்து ஒரு மாற்று,தேவை என்பது தான்.