TED Talks with Tamil transcript

கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?

TED2010

கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?
2,651,431 views

சைவ உணவாளர்களாக இருப்பது சுற்றுப்புற சூழலுக்கும், விலங்குகளுக்கும் நல்லது என்ற கூற்று நமக்கெல்லாம் தெரிந்ததே -- ஆனால் இப்போது உள்ள அசைவ உணவு உட்கொள்ளும் பண்பாட்டில், இக்கூற்று பெரிய அளவில் மாறுதலை உருவாக்க கடினமாக இருக்கும். கிரகாம் ஹில்லிடம் வீரியமான மற்றும் யதார்த்தமான ஆலோசனை ஒன்றுண்டு. ...

அணில் குப்தா : இந்தியாவின் மறைந்து கிடக்கும் கண்டுபிடிப்புகளின் நாற்றங்கால்

TEDIndia 2009

அணில் குப்தா : இந்தியாவின் மறைந்து கிடக்கும் கண்டுபிடிப்புகளின் நாற்றங்கால்
764,089 views

அணில் குப்தா வளரும் நாடுகளின் போற்றப்படாத கண்டுபிடிப்பாளர்களை தேடும் பணியில் இருக்கிறார் - பலரது வாழ்கையை மாற்ற கூடிய புத்தி கூர்மையுடைய , வறுமையால் மறைந்துள்ள, தத்தம் நாட்டு தொழில் முனைவர்கள். அவர் எப்படி தேனிக்கள் வலைபின்னல் அவர்களின் தொடர்புக்கும் அவர்களுக்கான அங்கீகாரத்தை அடைவதற்கும் உதவுகிறது என்பதை காண்பிக்கிறார்.

சைமன் சினக்: சிறந்த தலைவர்கள் எவ்வாறு ஒரு செயலை ஊக்குவிக்கிறார்கள்

TEDxPuget Sound

சைமன் சினக்: சிறந்த தலைவர்கள் எவ்வாறு ஒரு செயலை ஊக்குவிக்கிறார்கள்
48,856,581 views

சைமன் சினக் உணர்ச்சிமயமான தலைமையைப்பற்றிய எளிமையான மற்றும் சக்திவாய்ந்த மாதிரியைப்பற்றி உரையாற்றுகிறார். அவரது மாதிரி 'ஏன்?' என்ற வினாவிலிருந்து ஆரம்பிக்கிறது, அவரது கருத்திற்கு ஆதரவாக அவர் ஆப்பிள், மார்டின் லூதர் கிங் மற்றும் ரைட் சகோதரர்களையும், எதிராக டிவோ-யும் உதாரணம் காட்டுகிறார்.

ஆடோரா ஸ்விடக்: பெரியவர்கள் சிறுவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்

TED2010

ஆடோரா ஸ்விடக்: பெரியவர்கள் சிறுவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்
6,022,458 views

குழந்தை அதிமேதாவி ஆடோரா ஸ்விடக், கூறுகிறார் - உலகத்திற்கு சிறுபிள்ளைத்தனமான சிந்தனை தேவை : துணிவுள்ள யோசனைகள், நல்ல கற்பனைத்திறன், அளவு கடந்த நம்பிக்கை. குழந்தைகளின் கனவுகள் அதிக எதிர்பார்ப்பிற்கு தகுதியுடையவை - வளர்ந்தவர்களின், தூண்டுதலில்லாத, குழந்தைகளிடம் இருந்து கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனில் இருந்து .

டெரெக் சிவேர்ஸ்: இயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம்

TED2010

டெரெக் சிவேர்ஸ்: இயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம்
8,596,071 views

டெரேக் சிவேர்ஸ், சில வியப்பூட்டும் சில காணொளிகளுடன், எப்படி ஒரு இயக்கம் உண்மையிலேயே உருவாகிறது என்பதை விளக்குகிறார் (குறிப்பு: இரண்டு பேர் தேவை)

டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?

TEDIndia 2009

டேரேக் சிவேர்ஸ்: அபூர்வமா அல்லது சிற்சில வேற்றுமைகள் மட்டுமா?
3,629,976 views

ஒவ்வொன்றுக்கும் இரு பக்கங்கள் உண்டு. நீங்கள் சற்றும் எதிர்பாரா விடயங்களைப் பயன்கொண்டு இரண்டே நிமிடங்களில் இக்கூற்றினை மெய்பிக்கிறார் டேரேக் சிவேர்ஸ்.

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்

TEDIndia 2009

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்
405,132 views

2005 ஆண்டு வரை, உலகில் 15 சதவீதம் மட்டுமே வரைபடமாக உள்ளது. பேரழிவிற்கு பின் இதனால் உதவி செய்ய கால தாமதம் ஆகிறது. மேலும் இது உபயோக படுத்தாத நிலம் மற்றும் சாலைகளின் பொருளாதார ஆற்றலை மறைத்து விடுகிறது. இந்த சிறிய உரையில், கூகுளின் லலிதேஷ் கட்ரகட்டா உலகம் முழுவதும் பயன்படுத்தும் குழு வரைபடம் உருவாக்கும் செயலி - மேப் மேக்கரின் செயல் முறை விளக்கம் அளிக்கிறார்.

கிரண் பீர் சேடி பொறுப்பெடுத்துக் கொள்ள சிறுவர்களை பயிற்றுவிக்கிறார்

TEDIndia 2009

கிரண் பீர் சேடி பொறுப்பெடுத்துக் கொள்ள சிறுவர்களை பயிற்றுவிக்கிறார்
1,641,273 views

சிறுவர்களுக்கு "என்னால் முடியும்" எனும் விலைமதிப்பில்லாத பாடத்தை இந்தியாவில் உள்ள ரிவர்சைடு பள்ளி எம்முறையில் கற்பிக்கிறது என்பதை பள்ளி நிறுவனர் கிரண் பீர் சேடி காண்பிக்கிறார். அவரது மாணவர்கள் எவ்வாறு பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தீர்க்கிறார்கள் என்பதையும், தங்கள் பெற்றோருக்கே பாடம் கற்பிக்கும் விந்தையையும் காண்பிக்கிறார்.

பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிரான சுனிதா கிருஷ்ணனின் போராட்டம்

TEDIndia 2009

பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிரான சுனிதா கிருஷ்ணனின் போராட்டம்
4,294,386 views

பாலியல் சம்பந்தமான அடிமைத்தனத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காக சுனிதா கிருஷ்ணன் தன் வாழ்க்கையை அற்பணித்து உள்ளார். பாலியல் சம்பந்தமான அடிமை தொழில், பலமில்லியன் டாலர்கள் புழங்கும் உலக வர்த்தகம். இந்த துணிச்சலான பேச்சில், அவர் மூன்று கொடுமையான கதைகள் மற்றும் தன் கதையையும் கூறிவிட்டு, இளமை காலத்தில் பாதிக்கப்பட்ட இவர்களின் மறு வாழ்விற்காக அனைவரிடமும் அதீத மானுட அக்கறையுடன் இருக்குமாறு அழைக்கிறார்.

பிரணவ் மிஸ்த்ரி : ஆறாவது  அறிவு பொறியியல் வளர்ச்சியினால் சாத்தியகூறுகள்

TEDIndia 2009

பிரணவ் மிஸ்த்ரி : ஆறாவது அறிவு பொறியியல் வளர்ச்சியினால் சாத்தியகூறுகள்
18,689,186 views

TEDஇந்தியா-வில், பிரணவ் மிஸ்த்ரி நாம் வாழும் உலகமும், கணினி உலகமும் இணைந்து செயல்பட உதவும் பல விதமான ஆய்வுகள் செய்து காட்டினார் - மிக முக்கியமாக அவரது "ஆறாவது அறிவு" சாதனம் மற்றும் புதிய புரட்சி கரமான தாள் வடிவ கணினியாகும். மேடையில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "ஆறாவது அறிவின்" மென்பொருள் அனைவரும் பயன் படும்வகையில் இலவசமாக்க கிடைக்கப்படும் என்று கூறினார்.

காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா

TEDGlobal 2009

காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா
2,717,871 views

14 வயதில், வறுமையும் பஞ்சமும் பீடிக்கப்பட்ட நிலையில், மலாவியச் சிறுவன் ஒருவன் காற்றாலை ஒன்றை நிறுவினான், தன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. தற்போது வளர்ந்து, 22 வயது வாலிபராகி நிற்கும் வில்லியம் கம்க்வம்பா, TEDல் இரண்டாம் முறையாக பேசுகையில் தன் வாழ்க்கையையே மாற்றிய அந்தக் கண்டுபிடிப்பு பற்றி தானே சுவைபடச் சொல்கிறார்.

அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்

TEDGlobal 2009

அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்
25,352,736 views

ஊக்கவியலில் உள்ள குழப்பம் பற்றி வாழ்க்கைத் தொழில் ஆய்வாளரான டண் பிங்க் விசாரணை செய்கிறார், சமூகவியல் விஞ்ஞானிகளுக்கு தெரிந்த ஆனால் அநேக முகாமையாளர்களுக்கு தெரிந்திருக்காத தகவல்களுடன்: நாங்கள் நினைப்பது போல பாரம்பரிய சனமானங்கள் எப்போதும் பயனளிப்பதில்லை என்பதற்கான தெளிவுபடுத்தும் கதைகளையும் கேளுங்கள் -- இது ஒரு முன்னோக்கிய பாதையாக கூட அமையலாம்.

கணிதக் கல்வியை மாற்றுவதற்கான ஆதர் பென்ஜமினின் சூத்திரம்

TED2009

கணிதக் கல்வியை மாற்றுவதற்கான ஆதர் பென்ஜமினின் சூத்திரம்
2,625,810 views

எப்பொழுதும் கணித ஆசிரியரிடம் யாராவது ஒருவர் கேட்கும் கேள்வி - "என் நடைமுறை வாழ்க்கைக்கு நுண் கணிதம் பயன் தருமா?". நம்மில் பலருக்கு இல்லை என்பதே பதிலாய் இருக்கும் என்கிறார் ஆர்தர் பென்ஜமின். இன்றைய கணித பாடத் திட்டத்தை எண் சமிஞ்சை யுகத்திற்கு பொருத்தமானதாக மாற்ற, அவர் ஒரு தைரியமான ஆலோசனையை நாம் முன் வைக்கிறார்.

ரிச்சர்ட் சென்.ஜான் : "வெற்றி ஒரு தொடர் பயணம்”

TED2009

ரிச்சர்ட் சென்.ஜான் : "வெற்றி ஒரு தொடர் பயணம்”
4,347,745 views

'ரிச்சர்ட் சென்.ஜான்' , தனது வெளிப்படையான பாணியில்,"வெற்றி என்பது ஒரே வழி அல்ல;அது ஒரு தொடர்ச்சியான பயணம்" என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார். "எப்போது நாம் முயல்வதை நிறுத்துகிறோமோ அப்போதே நாம் தோற்கிறோம்" என்பதை தனது வியாபாரத்தின் லாப-நட்டங்களில் இருந்து கற்ற பாடத்தின் மூலம் நமக்கு விவரிக்கிறார்.

கெவின் சூரெஸ்: கெவின் சூரெஸின் சுற்றுபுற சூழலை பாதிக்காத கட்டுமான பலகைகள் :

TED2009

கெவின் சூரெஸ்: கெவின் சூரெஸின் சுற்றுபுற சூழலை பாதிக்காத கட்டுமான பலகைகள் :
389,615 views

Kevin Surace suggests we rethink basic construction materials -- such as the familiar wallboard -- to reduce the huge carbon footprint generated by the manufacturing and construction of our buildings. He introduces EcoRock, a clean, recyclable and energy-efficient drywall created by his team at Serious Materials.

ஈவ் பெஹரின் மீமுன்னூட்டிய விசையுந்து வடிவமைப்பு

TED2009

ஈவ் பெஹரின் மீமுன்னூட்டிய விசையுந்து வடிவமைப்பு
627,065 views

ஈவ் பெஹர் மற்றும் பாரெஸ்ட் நார்த் மென்பளப்பான, திறம்மிகு மின்சார விசையுந்து "இயக்கம் ஒன்றினை" வெளியிடுகின்றனர். அவர்கள் அவர்களது நெருக்கமில்லா (எனினும் ஒரே மாதிரியான) சிறு வயது படவில்லைகளை நம்மிடம் பகிர்ந்து, எவ்வாறு உடனுழைப்பு அவர்களது நட்பினையும் கனவுகளையும் முடுக்கி விட்டது என்பதை சொல்கிறார்கள்.

HIV பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்: புதிய உண்மைகளும், ஆச்சரியப்படக் கூடியக் காட்சிகளும்

TED2009

HIV பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்: புதிய உண்மைகளும், ஆச்சரியப்படக் கூடியக் காட்சிகளும்
1,174,291 views

உலகத்தின் மிகப் பெரிய உயிர்கொல்லியும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டதுமான ஹெச்.ஐ.வி. நோய் பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங் புதிய புள்ளிவிவரங்களை காட்சிப்படங்களின் (விஷுவல்ஸ்) மூலம் கூறுகிறார். இதன் மூலம் அவர் மருந்து சாப்பிட்டு நோயைக் குணப்படுவதை விட நோய் பரவாமல் தடுப்பதுதான் மூலம் தான் இந்த தொற்று நோய்க்கு முடிவு கட்ட முடியும் என தனது விவதாத்தை முன் வைக்கிறார்.

அல் கோர் புவிப்பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கிறார்.

TED2009

அல் கோர் புவிப்பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கிறார்.
952,886 views

அறிவியலாளர்கள் கணித்ததைவிடவும், உலகப்பருவநிலை போக்கு எவ்வாறு மோசமாக உள்ளதென்ற உண்மையை தெரியப்படுத்த உலகின் பல பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இன்றைப்படுத்தப்பட்ட காட்சிகளை டெட்2009 - இல், அல் கோர், வழங்குகிறார். இதில் "சுத்தக்கரி" குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிடுகிறார்.

உலகின் மிக முக்கிய பிரச்சனைகளை எப்படி சாதுர்யமாக எதிர் கொள்ள முடியும் என்பது பற்றி  அலெக்ஸ் டபாரக்

TED2009

உலகின் மிக முக்கிய பிரச்சனைகளை எப்படி சாதுர்யமாக எதிர் கொள்ள முடியும் என்பது பற்றி அலெக்ஸ் டபாரக்
881,960 views

பொருளாதார நிபுணரான அலெக்ஸ் டபாரக்கின் பேச்சில் நம் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த பல விஷயங்களை தெளிவாக ஆராய்ந்துள்ளார். பல விஷயங்களில் வேறுபபட்டிருந்த இந்த உலக மக்களை, தடையில்லா வர்த்தகமும் உலகமயமாக்கலும் யாருமே சிந்தித்திராத அளவுக்கு ஒரு அறிவு சார் சமூகமாக மாற்றியுள்ளது என தீர்ககமாக சொல்கிறார் இவர்.

ப்யாடீ மேஸ் விளக்கும்  "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்

TED2009

ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்
11,289,293 views

இந்த விளக்கம் ப்யாடீ மேஸ் என்பவரிடமிருந்து MIT ஆய்வகத்தில், பிரணவ் மிஸ்திரி ஆல் வழிநடத்தப்பட்டது. இது TED ல் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. இது நாம் அணிந்து கொள்ளக்கூடிய சாதனம், ஒரு படம் காட்டும் கருவியுடன் இணைந்தது. ந்ம் சுற்றுசூழலுக்கு ஏற்ப இடைத்தாகத்தை வழி வகுக்கும். கற்பனை செய்து பாருங்கள் "மைநோரிடீ ரிபோர்ட்" இன்னும் பல.

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்

TED2009

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்
4,796,732 views

தன் புதிய வகை அருளுடைமையால், உலகின் பெரிய பிரச்சனைகளுக்கு விடை காணலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பில் கேட்ஸ். தன் அதீத ஆர்வமுடைய மற்றும் குறும்பான 18 நிமிடம் பேச்சு மூலம், இரு வினாக்களை எம்மிடம் எழுப்பி, அதற்கான விடைகளை தருகிறார்.

மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

TEDGlobal 2007

மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
336,911 views

இந்த சிறிய, புகைப்படம் நிறைந்த உரையில், மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் ஒரு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சுலு கம்பி கலை நெசவாளர்கள், எவ்வாறு இந்த உலகினையே தங்களது பளிச்சிடும் வேலைபாட்டிற்கு சந்தையாக்கினார்கள் என்பதை விளக்குகிறார்.

ஆடம் க்ரோச்செர் மற்றும் அவருடைய குளிர் சாதன பெட்டி.

TED2007

ஆடம் க்ரோச்செர் மற்றும் அவருடைய குளிர் சாதன பெட்டி.
973,042 views

பழைய தொழில்நுட்பங்களைக் கொண்டு, மின்சார வசதி இல்லாமல் உள்ள பல கிராமங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் உபயோகமான ஆடம் க்ரோச்செரின் குளிர் சாதன பெட்டியின் இயக்கமும் அவற்றின் செயல் பாடுகளையும் இந்த பேச்சில் காணலாம்.

மூதாதைய மொழியைப் பற்றி முரே கெல்-மான்

TED2007

மூதாதைய மொழியைப் பற்றி முரே கெல்-மான்
944,446 views

TED2007 இல் இயற்பியலின் நளினத்தைப் பற்றி பேசியபிறகு, வியத்தகு மனிதரான முரே கெல்-மான், அவரது இன்னொரு மிகுவிருப்பமான ஈடுபாட்டை நம்முடன் மேலோட்டமாக பகிர்ந்துக் கொள்கிறார்: நம்முடைய இக்கால மொழிகளின் பொதுவான மூதாதைய மொழியினை கண்டுபிடித்தல் தொடர்பாக;

உங்கள் மரபணுக்கள் உங்கள் விதியை நிர்ணயிக்கவில்லை எனக் கூறுகிறார் டீன் ஆர்நிஷ்.

TED2008

உங்கள் மரபணுக்கள் உங்கள் விதியை நிர்ணயிக்கவில்லை எனக் கூறுகிறார் டீன் ஆர்நிஷ்.
1,725,634 views

டீன் ஆர்நிஷ், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மரபணு அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தன் ஆராய்ச்சியின் முடிவை பகிர்ந்து கொள்கிறார். அவரின் கூற்றின்படி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, அன்பு நிறைந்த வாழ்க்கை முறையைக் கடைப் பிடிப்பதன் மூலம், மூளையின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதாகும்.

அல் கோர்: காலநிலைப் பிரச்சினையின் மீதான புதிய சிந்தனை

TED2008

அல் கோர்: காலநிலைப் பிரச்சினையின் மீதான புதிய சிந்தனை
2,169,877 views

இந்தப் புத்தம் புதிய ஸ்லைடு ஷோவில் (டிஈடி.காமில் முதன்மையானது), காலநிலை மாற்றத்தின் வேகமானது விஞ்ஞானிகள் சமீபத்தில் முன்னறிவித்ததை விட மோசமானதாக இருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களை அல் கோர் அவர்கள் சமர்பிக்கிறார்கள்.

ஆலன் கே யோசனைகள் பற்றிய சக்திமிக்க யோசனையை பகிர்ந்து கொள்கிறார்.

TED2007

ஆலன் கே யோசனைகள் பற்றிய சக்திமிக்க யோசனையை பகிர்ந்து கொள்கிறார்.
851,991 views

தனக்கே உரித்தான ஆழ்ந்த அறிவுத்திறத்துடன் ஆலன் கே சோதனைகளை குழந்தைகளுக்குக் கணித ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கம்ப்யூட்டர் மூலம் பயிற்றுவிக்க - அதனால் மட்டுமே முடியும் - சிறந்த செயல் முறை உத்திகளை தொலை நோக்கு ஆற்றலுடன் சிந்திக்கிறார்.

இஸபெல் அலன்டே, அதீத ஆர்வம் பற்றிய கதைகளைச் சொல்கிறார்.

TED2007

இஸபெல் அலன்டே, அதீத ஆர்வம் பற்றிய கதைகளைச் சொல்கிறார்.
4,998,808 views

நூலாசிரியரும் செயற்பாட்டாளருமான இஸபெல் அலன்டே, இந்த உரையில் பெண்கள், படைப்பாக்கம், பெண்ணியலின் வரைபிலக்கணம் மற்றும் அதீத ஆர்வம் என்பனவற்றைப் பற்றிக் கலந்துரையாடுகிறார்.

பிளெயிஸ் அகுவேரா ஒய் ஆர்கஸ் டெமோஸ் போட்டோசிந்த்

TED2007

பிளெயிஸ் அகுவேரா ஒய் ஆர்கஸ் டெமோஸ் போட்டோசிந்த்
5,831,957 views

டிஜிட்டல் உருவங்களை நாம் பார்வையிடும் முறையையே மாற்றக் கூடிய மென்பொருளான, போட்டொசிந்தின் ஒரு பளிச்சிடும் செயல்முறையை பிளெயிஸ் அகுவேரா ஒய் ஆர்கஸ் லீட்ஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார். வலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட புகைப்படங்களை உபயோகித்து, போட்டோசிந்த் மெய்சிலிர்க்க வைக்கிற கற்பனாகரமான நிலப்பரப்புகளைக் கட்டமைக்கிறது மேலும் அதனூடாக நாம் வழிகண்டு செல்லவும் அனுமதிக்கிறது.