TED Talks with Tamil transcript

டெர்ரி மூர்: எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?

TED2012

டெர்ரி மூர்: எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?
3,872,013 views

எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு தன் நகைச்சுவை சிற்றுரையில் வியப்பிற்குரிய பதிலொன்றைத் தருகிறார் டெர்ரி மூர்.

சிப் கிட்: புத்தக வடிவமைப்பு நகைச்சுவைக்குரிய விஷயம் அல்ல. சரி. அது அப்படிதான்.

TED2012

சிப் கிட்: புத்தக வடிவமைப்பு நகைச்சுவைக்குரிய விஷயம் அல்ல. சரி. அது அப்படிதான்.
2,475,812 views

சிப் கிட் புத்தகங்களை அவற்றின் அட்டைகளை வைத்து மதிப்பிடுவதில்லை. அவர் புத்தகத்தின் பொருள் உள்ளடங்கிய நகைச்சுவை ததும்பும் அட்டைகளை வடிவமைக்கிறார். TED2012-ன் நகைச்சுவையான தனது உரையின் மூலமாக நூலட்டை வடிவமைப்புக் கலையையும் அதன் ஆழமான சிந்தனையையும் விளக்குகிறார். (சி பிர்ல்மன் மற்றும் டேவிட் ராக்வெல் ஆகியோரால் நெறியாளப்பட்ட TED2012 வடிவமைப்புக் கூட்டத்தொடரிலிருந்து.)

லேமா குவோபீ: பெண்களின் அறிவாற்றலை, திறமையை அவர்களின் பெருமையை வெளிக்கொணருங்கள்.

TED2012

லேமா குவோபீ: பெண்களின் அறிவாற்றலை, திறமையை அவர்களின் பெருமையை வெளிக்கொணருங்கள்.
1,320,003 views

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லேமா குவோபீ நம்மிடம் இரண்டு கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஒன்று அவர் சொந்த வாழ்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றங்களைப் பற்றியது. மற்றொன்று உலகெங்கிலும் உள்ள பயன்படுத்தப்படாத உள்ளார்ந்த ஆற்றல் மிக்க பெண்களைப் பற்றியது. நாம் பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் இந்த உலகை மாற்றியமைப்போமா?

Brené Brown: பிரீனே பிரௌன்: அவமானத்திற்கு செவிமடுக்கும்பொழுது

TED2012

Brené Brown: பிரீனே பிரௌன்: அவமானத்திற்கு செவிமடுக்கும்பொழுது
13,362,658 views

அவமானம் ஒரு பேசப்படாத கொள்ளை நோய், பல வகையான பாதிக்கப்பட்ட நடத்தைக்குப் பின்னால் இருக்கும் இரகசியம். பிரீனே பிரௌன், யாருடைய வடுபடும்நிலை பற்றிய முந்தைய பேச்சு பெருவெற்றி பெற்றதோ அவர், மக்கள், அவமானத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ளும்போது என்ன நடக்கக் கூடும் என ஆய்ந்தறிகிறார். அவருடைய நகைச்சுவையும், மனிதாபிமானமும் மற்றும் வடுபடும்நிலையும் எல்லா வார்த்தைகளிலும் ஒளிர்கின்றன.

ஜோ சபியா : கதை சொல்லும் தொழில்நுட்பம்

Full Spectrum Auditions

ஜோ சபியா : கதை சொல்லும் தொழில்நுட்பம்
1,352,099 views

ஐபாடில் கதைசொல்லும் ஜோ சபியா அவர்கள், சென்ற நூற்றாண்டில், பாப்-அப் புத்தகம் என்ற துணிவான கதை சொல்லும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியவரான லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் என்பவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். புதிய தொழில்நுட்பங்கள் எப்படி குகைகளின் சுவர்களிருந்தும், நம் கையில் உள்ள கையடக்க ஐபாட் வரை எவ்வாறு கதை சொல்ல உதவி புரிகின்றன என்று சபியா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அபர்ணா ராவ்: உயர்தொழில்நுட்பக் கலை (நகைச்சுவை உணர்வு கலந்தது)

TEDGlobal 2011

அபர்ணா ராவ்: உயர்தொழில்நுட்பக் கலை (நகைச்சுவை உணர்வு கலந்தது)
951,514 views

கலைஞரும், டெட் உறுப்பினருமான அபர்ணா ராவ், மிகவும் பரிச்ச்சயமானவைகளை வியப்பூட்டும் விதத்தில், நகைச்சுவையாக மறுகற்பனை செய்கிறார். அவரது சக ஊழியர் சோரன் போர்சுடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள உயர்தொழில்நுட்பக் கலைக் கருவிகளான - மின்அஞ்சல் செய்ய உதவும் தட்டச்சு, அறைக்குள் உங்களைத் தொடர்ந்து படம்பிடித்தாலும் திரையில் தோன்றாமல் மறைத்துவிடக் கூடிய காமிரா போன்றவை, சாதாரணப் பொருட்களினாலும் செயல்களினாலும் நிகழ்த்தக் கூடிய குறும்புத்தனம் நிறைந்த மறுபக்கத்தைக் காண்பிக்கிறது.

மார்கோ டேம்பெஸ்ட்: மிகுதிப்படுத்திய மெய்காட்டும் தொழில்நுட்ப மாயாஜாலம்

TEDGlobal 2011

மார்கோ டேம்பெஸ்ட்: மிகுதிப்படுத்திய மெய்காட்டும் தொழில்நுட்ப மாயாஜாலம்
1,168,431 views

மாயாஜாலம் கைத்திறன் நுட்பம் மற்றும் கவரும் வகையில் கதை சொல்லும் திறன் மூலம் மாயவித்தைக்காரர் மார்கோ டேம்பெஸ்ட் கவலையற்ற குச்சி உருவத்திற்கு TEDGlobal அரங்கத்தில் உயிர் கொடுக்கின்றார்.

பங்கர் ராய்: பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்

TEDGlobal 2011

பங்கர் ராய்: பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்
4,300,944 views

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு அசாதாரமான கல்லூரி ஒன்று பாமர மக்களை கற்றுத்தந்துக்கொண்டிருகிறது. படிக்காதவர்களாகிய அவர்களை, சூரிய சக்தி பொறியாளர்களாகவும், பல் மருத்துவர்களாகவும், மருத்துவர்களாகவும், கைவினைஞர்களாகவும் மாற்றிகொண்டிருக்கிறது. அந்த கல்லூரியின் பெயர் வெறுங்கால் கல்லூரி. அதை தொடங்கியவர் பங்கர் ராய் அவர்கள். இந்த உரையில் அவர் அக்கல்லூரி எப்படி செயல்படுகிறது என்பதை கூறுகிறார்.

மார்கோ தெம்பெஸ்ட்: மாயவித்தையின் உண்மையும் பொய்யும் (ஐபொட்-உடன்)

TEDGlobal 2011

மார்கோ தெம்பெஸ்ட்: மாயவித்தையின் உண்மையும் பொய்யும் (ஐபொட்-உடன்)
6,207,659 views

மூன்று ஐபொட்களை மாயவித்தைக்கான மேடை பொருட்களாகப் பயன்படுத்தி மார்கோ தெம்பெஸ்ட் உண்மை, பொய், கலை மற்றும் உணர்ச்சிகள் பற்றிய அறிவான, மனதை வசீகரிக்கும் எண்ணங்களை உருவாக்குகிறார்.

ஜோசெட் ஷீரன்: "பட்டினியை வெல்வோம்"

TEDGlobal 2011

ஜோசெட் ஷீரன்: "பட்டினியை வெல்வோம்"
949,398 views

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராகிய ஜோசெட் ஷீரன், இங்கு பசி - பட்டினி பிரச்னை குறித்தும், உலகில் ஏன் போதுமான அளவு உணவு விளைச்சல் இருந்தாலும் பட்டினிச் சாவுகள் தொடரும் அவல நிலை இன்னும் இருக்கிறது என்பது குறித்தும், உணவுக்காக இன்னும் போர்கள் நடைபெறுவது குறித்தும் உரையாற்றுகிறார். அவரது கனவு, உணவுப் பிரச்சனையைத் தனி மனித அளவிலும் தனி தேசங்களுக்குள்ளும் தீர்க்க முயலாமல், உலகமே இணைந்து செயல்பட்டுத் தீர்க்க வேண்டும் என்பதாகும்.

மேட் கட்ஸ்: 30 நாட்களுக்கு புதிதாக ஏதாவதொன்றை முயன்று பாருங்கள்

TED2011

மேட் கட்ஸ்: 30 நாட்களுக்கு புதிதாக ஏதாவதொன்றை முயன்று பாருங்கள்
12,215,040 views

நீங்கள் செய்ய வேண்டியது, செய்ய விரும்பியது, ஆனால் இன்னும் செய்து முடிக்கவில்லை என்று ஏதாவது இருக்கிறதா? மேட் கட்ஸ் அறிவுறுத்துகிறார்: 30 நாட்களுக்கு அதை செய்து பாருங்கள். இந்த சிறிய, எளிமையான சொற்பொழிவு, இலக்குகளை அமைப்பதற்கும், அவற்றை அடைவதற்குமான வழிவகையை எடுத்துரைக்கிறது.

ராஜேஷ் ராவ்: சிந்துசமவெளி நாகரிகத்தின் வரிவடிவத்திற்கான ரோஸட்டா கல்.

TED2011

ராஜேஷ் ராவ்: சிந்துசமவெளி நாகரிகத்தின் வரிவடிவத்திற்கான ரோஸட்டா கல்.
2,103,451 views

குறுக்கெழுத்துப் புதிர்களுக்கெல்லாம் தாய்ப்புதிர் போன்ற, 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துசமவெளியின் வரிவடிவத்தைப் புரிந்துகொள்ளும் பணியினால் ஈர்க்கப்படுள்ளார் ராஜேஷ் ராவ். டெட் 2011 கருத்தரங்கில், சிந்து சமவெளி நாகரிகத்தைப் புரிந்து கொள்வதற்கு முதற்படியாக, அதன் மொழியை எவ்வாறு அவர் கணினி தொழில் நுட்பத்தின் துணைகொண்டு அறிய முயல்கிறார் என்பதனை விளக்குகிறார்.

மாயா பேசேர் மற்றும் அவருடைய செலொ

TED2011

மாயா பேசேர் மற்றும் அவருடைய செலொ
991,353 views

செலிஸ்ட் மாயா பேசேர் சிறப்பான எட்டு பகுதி சிற்றிசைப் பாடலோடு அவருடைய ஏழு தொகுப்பையும் இசைகின்றார், மற்றும் அதை தொடர்ந்து ஆழ்நிலைத் தியான இசை மற்றும் ஒளிகாட்சியை தொழில்நுட்பம் மூலம் ஒரு எல்லையற்ற மாறுபட்டஒலியை உருவகுகின்றார். இசை ஸ்டீவ் ரெய்ச் "செல்லோ கவுன்ட்டர் பாயிண்ட்", பில் மோர்ரிசன் ஒளிக்காட்சி, மற்றும் டேவிட் லங்க்னுடைய " வேர்ல்ட் டு கம்", இரித் பத்ச்ரினுடைய ஒளிக்காட்சி.

கமில்லே  சீமென்: மறக்க முடியாத துருவப் பகுதிப் பனிக்கட்டியின் நிழற்படங்கள்

TED2011

கமில்லே சீமென்: மறக்க முடியாத துருவப் பகுதிப் பனிக்கட்டியின் நிழற்படங்கள்
1,161,964 views

நிழற்பட கலைஞர் கமில்லே சீமென் பனித்தொடர்களை நிழற்படமாக எடுத்து, அந்த மிகப் பெரிய பழமை வாய்ந்த, பெரும்பகுதி பனியின் சிக்கலான அழகை கண்பிகின்றார். அவருடைய புகைப்பட படவில்லைக்காட்சியில் மூழ்குங்கள், "கடைசி பனித்தொடர்".

"பஸ்ஸகாக்லியா" எனப்படும் ஓர் இசை வடிவத்தை, இருவரிசையாக வழங்கும் ரொபர்ட் குப்தாவும், ஜோஷுவா ரோமனும்.

TED2011

"பஸ்ஸகாக்லியா" எனப்படும் ஓர் இசை வடிவத்தை, இருவரிசையாக வழங்கும் ரொபர்ட் குப்தாவும், ஜோஷுவா ரோமனும்.
896,041 views

வையோலின் இசைக்கலைஞர் ரொபர்ட் குப்தாவும், வயோலா இசைக்கலைஞர் ஜோஷுவாவும், ஹல்வோர்சன்னின் "பஸ்ஸகாக்லியா" என்னும் ஒரு எசுப்பானிய இசைவடிவத்தை, ஒப்பற்ற ஓர் கூட்டுமுயற்சியாக நமக்கு வழங்குகின்றனர். "ஸ்ட்ராடிவோரிய" பழைமையை பறைசாற்றும் விதமாய் அமைந்த வயொலாவினை ரோமன் இசைக்கிறார். நொடிக்கு நொடி இரு கலைஞர்களும் பிண்ணிப் பிணைந்து படைக்கும் இசையை (இடையில் ஏற்படும் தடங்கலை எத்தனை லாவகமாக கையாண்டு மீண்டு வருகின்றனர் என்பதையும்) கேட்டு சுவைக்க எத்தனை இன்பம். இவர்கள் இருவரும் TED அன்பர்கள் என்பதும், அவர்களின் பிணைப்பு, இந்த இருவரிசையை எவ்வாறு சிறப்பாக்குகிறது என்பதும் நாம் அறியவேண்டியது.

ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்தி

TED2011

ரோன் குட்மன்: புன்னகையில் புதைந்துள்ள சக்தி
5,652,656 views

ரோன் குட்மன் புன்னகை குறித்த பல ஆய்வுக்குறிப்புகளை ஆராய்ந்து, சில வியக்கத்தக்க முடிவுகளை வெளியிடுகிறார். உங்களது புன்னகையை வைத்து உங்களது ஆயுளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதும், ஒரு சிறிய புன்முறுவல் உங்களது நல வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க விளைவினை ஏற்படுத்தும் என்பதும் உங்களுக்கு தெரியுமா? பரிணமிக்கும் இந்த தொற்றக்கூடிய இயல்பினைக்குறித்து தெரிந்து கொள்ளும் பொழுதே ஒரு சில முக தசைகளை சுருக்கி விரிக்கவும் தயாராகுங்கள்.

ரீக் இலியாஸ் : விமான விபத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட மூன்று விஷயங்கள்

TED2011

ரீக் இலியாஸ் : விமான விபத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட மூன்று விஷயங்கள்
7,721,543 views

ஜனவரி 2009 இல் நியூ யார்க் நகரத்தின் ஹட்சன் ஆற்றில் தரை இறக்கப்பட்ட விமான எண் 1549 இன் முன் வரிசையில் ரீக் இலியாஸ் அமர்த்தப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த விமானம் ஆற்றில் தரை இறக்கப்பட்டபோது அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது? TEDஇல் அவர் முதன் முறையாக அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்

TED2011

வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்
977,468 views

தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுச்சி கண்டுள்ள இளைஞர்கள் தலைமையில் அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சிக்கு மத்தியில், வாதா கான்பர், அல் ஜசீரா தொலைகாட்சியின் தலைவர் எகிப்து, துனிசியா, லிபியா போன்ற நாடுகளில் நிகழ்ந்து வரும் நம்பிக்கை தரும் மாற்றங்களை, இந்த சக்தி வாய்ந்த தருணத்தில் தங்கள் இயலாமையை விட்டு வெளிவந்து மாற்றங்களுக்கு குரல் கொடுக்கலாம் என்ற மக்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

சுஹைர் ஹம்மாது: போர், அமைதி, பெண், அதிகாரம் என்பன சார்ந்த கவிதைகள்

TEDWomen 2010

சுஹைர் ஹம்மாது: போர், அமைதி, பெண், அதிகாரம் என்பன சார்ந்த கவிதைகள்
774,896 views

கவிஞர் சுஹைர் ஹம்மாது மயிர்க்கூச்சரியும் இரண்டு கவிதைச் சரமான "என்னால் என்ன முடியும்", "உடைந்த கொத்துகள்" போன்றவற்றில், போரும் அமைதியும், பெண்ணும் அதிகாரமும் குறித்து புனைகிறார். "அஞ்சுதல் வேண்டாம் வெடித்த குண்டிற்கு; வேண்டுமானால் வெடிக்காதவற்றிற்கு அஞ்சு" என்ற சொற்கோவைக்கு காத்திருங்கள்.

நீள் பஸ்ரிச்சா : அற்புதத்தின் மூன்று அம்சங்கள்

TEDxToronto 2010

நீள் பஸ்ரிச்சா : அற்புதத்தின் மூன்று அம்சங்கள்
3,207,333 views

நீள் பஸ்ரிச்சாவின் 1000 அற்புதமான விஷயங்கள் என்ற வலைப்பதிவு, உணவகங்களில் இலவசமாக நமக்கு பரிமாறப்படும் உணவிலிருந்து சுத்தமான படுக்கை வரை, வாழ்க்கையில் உள்ள சின்ன சின்ன சந்தோஷங்களை, நம்மை ரசிக்கும்படி செய்கிறது. TEDxToronto வில் அவர் தந்த மனம் நெகிழும் உரையில், ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கான மூன்று ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்

TEDWomen 2010

ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்
5,209,500 views

இந்த சிறிய பேச்சில், ஏரியானா ஹஃபிங்க்டன் அவர்கள் ஒரு சிறிய எண்ணத்தை பகிரும் இடத்தே எப்படி அது பெரிய எண்ணங்களை நம்முள் எழுப்பும் என்பதை உணர்த்துகிறார்: நல்ல இராத்தூக்கத்தின் ஆற்றல் விவரிக்கப்படுகிறது. குறைவாகவே தூங்குகிறேன் என்று பெருமை பட்டுக்கொள்வோரை, கண் அயரத் தூங்கி பெரிய பலனைக் காண நம்மை கேட்டுக்கொள்கிறார். நாம் நன்றாகத் தூங்கினால் நம் திறனும், மகிழ்ச்சியும் பன்மடங்கு உயர்வது உறுதி. அதுமட்டுமல்ல நமது தீர்வு காணும் திறனும் பன்மடங்கு உயரும் என உணர்த்துகிறார்.

பிரீன் பிரவுன் : வடுபடத்தக்க தன்மையின் சக்தி

TEDxHouston

பிரீன் பிரவுன் : வடுபடத்தக்க தன்மையின் சக்தி
46,319,192 views

பிரீன் பிரவுன், ஆராய்ச்சி செய்வது, மனித இணைப்புகளைப் பற்றி -- நாம் பிறருடைய உணர்வை அறிந்து செயல்படும் திறனை, பிறரிடம் சொந்தம் கொண்டாடும் திறனை மற்றும் அன்புக்கொள்ளும் திறனைச் சார்ந்தது. TEDxHouston இல் நடந்த மாநாட்டில், தமது நகைச்சுவை கலந்த சொற்பொழிவில், நம் மனங்களில் ஆழமாக பதியும் முறையில், அவர் தமது ஆராய்ச்சியில் கற்றுக்கொண்ட ஆழ்ந்த உள்நோக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். தம்மைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியும் அறியச் செய்த, ஒரு தனிப்பட்ட தேடலில் தம்மை அழைத்துச் சென்ற, ஆராய்ச்சிப் பற்றி பேசுகிறார். எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடிய, ஒரு அற்புதமான சொற்பொழிவு இது.

கிரண் பேடி : மாறுபட்ட ஒரு காவல் அதிகாரி

TEDWomen 2010

கிரண் பேடி : மாறுபட்ட ஒரு காவல் அதிகாரி
1,401,566 views

கிரண் பேடி வியப்பான தற்குறிப்பை உடையவர். காவல் தலைமை அதிகாரியாய் வருவதற்கு முன்பு ஒரு கடினமான சிறைச்சாலையை கவனித்து வந்தார் - குற்றங்களை தடுப்பதிலும், கல்வியிலும் கவனம் செலுத்தி சிறைச்சாலையை ஒரு பள்ளியாகவும் தியான பீடமாகவும் மாற்றினார். அவர் தனது எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் TEDWomen நிகழ்வில் பகிர்ந்து கொள்கின்றார்.

பர்டன் சீவர்: பேணக்கூடிய கடல் உணவு? அறிவு பெறுவோம்.

Mission Blue Voyage

பர்டன் சீவர்: பேணக்கூடிய கடல் உணவு? அறிவு பெறுவோம்.
614,893 views

மடை பர்டன் சீவர் வழங்கும் ஒரு நூதன சிந்தனை: கடல் உணவு ஒரு சிறந்த புரதச்சத்து மிகு உணவு. ஆனால், அளவுகடந்த மீன்பிடிப்பு ஆழியைத் துன்புறுத்துகிறது. மீனை தொடர்ந்து நம் உணவு மேசையில் இடம்பெறச் செய்ய அவர் தரும் ஒரு எளிய தீர்வு, ஒவ்வொரு தாயும சொல்லும் -- "காய்கறிகளை உண்" என்பதையும் உள்ளடக்கியது.

ஆனி லென்னாக்ஸ்: நான் ஏன் எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உள்ளேன்?

TEDGlobal 2010

ஆனி லென்னாக்ஸ்: நான் ஏன் எச்.ஐ.வி / எய்ட்ஸ் செயல் திறனாளராக உள்ளேன்?
542,975 views

பாப் பாடகி ஆனி லென்னாக்ஸ், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது "SING" பரப்புரைக்கும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக்கும், அதனை தீவிரமாக எதிர்த்துப் போராடவும் அதிகப்படியான தனது நேரத்தையும் ஒதுக்கியுள்ளார். நெல்சன் மண்டேலாவோடு தான் பணிபுரிந்த நினைவும், நம்பிக்கை இழந்த ஒரு ஆப்ரிக்க சிறுமியினை சந்தித்த நினைவும் தன்னை எப்படி ஊக்கமூட்டுவதாய் அமைந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார்.

டெரெக் சிவெர்ஸ்: உங்கள் குறிக்கோள்களை உங்களுடனே வைத்திருங்கள்

TEDGlobal 2010

டெரெக் சிவெர்ஸ்: உங்கள் குறிக்கோள்களை உங்களுடனே வைத்திருங்கள்
6,371,544 views

வாழ்வில் ஒரு அருமையான திட்டம் மனதில் தோன்றியவுடன், உடனடியாக மற்றவரிடம் அதை சொல்லவே நாம் தூண்டப்படுவோம். ஆனால், டெரெக் சிவெர்ஸ், குறிக்கோள்களை ரகசியமாக வைத்திருப்பதே சிறந்தது என்கிறார். 1920கள் முதல் நடந்த ஆய்வுகளின் உதவியுடன், தங்கள் குறிக்கோள்களைப்பற்றி பேசுபவர்களுக்கு ஏன் அக்குறிக்கோள்களை அடைவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன என்பதை விளக்குகிறார்.

உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்

TED@Cannes

உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்
3,914,736 views

அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது பில்லியனைத் தொடக்கூடும். இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஏழ்மையில் உள்ளவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும். இந்த முரணான விடையத்தை ஹான்ஸ் ரோஸ்லிங் கேனில் நடைபெற்ற TED கூட்டத்தில புள்ளியியலை விவரிக்கும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விளக்கினார்.

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்

TEDIndia 2009

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்
1,062,056 views

குழந்தைகளிடம் உள்ள வளர்ச்சி குறைபாடுகளை நாம் அவர்களுடைய குணதசியங்களை வைத்து கண்டரிகின்றோம், ஆனால் அதிதி சங்கரதாஸ்க்கு தெரியும் நாம் அவர்களுடைய மூளையை நேரடியாக பார்க்க வேண்டும் என்று. அவர் அவருடைய ஆராய்ச்சி கூடத்தில் பிரசித்தமான உள்ள EEG கருவி எவ்வாறு தவறான நோய்யரிதலை கண்டறிந்து குழந்தைகளின் வாழ்வை மாற்றம் செய்கின்றது என்பதை விளக்குகின்றார்.

ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் நடனத்தின் துணை கொண்டு புற்றுநோயை எதிர்கொள்கிறார்

TEDIndia 2009

ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் நடனத்தின் துணை கொண்டு புற்றுநோயை எதிர்கொள்கிறார்
806,887 views

புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரான ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக 2008ல் கண்டுபிடிக்கப் பட்டது. நாட்டியத்தின் துணை கொண்டு புற்றுநோயை அவர் எதிர்கொண்ட கதையைக் கூறுவதுடன், இதற்காக அவருக்கு வலிமையூட்டிய உருவக பாவனையை சிறிய நாட்டிய நிகழ்ச்சி மூலம் காண்பிக்கிறார்.

சார் கென் ராபின்சன்: கற்கும் புரட்சி வரட்டும்

TED2010

சார் கென் ராபின்சன்: கற்கும் புரட்சி வரட்டும்
9,209,583 views

சார் கென் ராபின்சனுடைய கூர்மையான 2006 இன் ஹாஸ்ய தொடர், இதில் அவர் பாடசாலை கற்பித்தலில் தீவிரமான ஒரு மாற்றம் வேண்டும் என்று வாதிடுகிறார் -- இது குழந்தைகளின் இயற்கையான திறமை மலர்வதர்க்கான ஒரு களத்தை அமைக்கும்.