TED Talks with Tamil transcript

ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது

TEDMED 2014

ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது
2,683,245 views

விளக்கம் (AUTISM)ஆடிஸமுள்ள , துணிவும் துடிப்பும் கொண்ட 16 வயதான ரோஸி கிங்க் கூறுகிறாள்: " வகைகளில் பல இருப்பது மக்களுக்கு மிகுந்த பயமளிப்பதால் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய பெட்டியில் போட்டுக் குறியிட முயலுகிறார்கள்". அவள் கேட்கிறாள்:ஏன் எல்லோரும் இயல்பாக இருக்க வேண்டுமென்று அவ்வளவு கவலைப் படுகிறார்கள்? ஒவ்வொரு குழந்தைக்கும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியருக்கும் , மற்றவர்களுக்கும் தனித்துவத்தைக் கொண்டாட அறைகூவல் விடுக்கிறாள்.மனிதனின் பல்வகைத் திறைமைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த பிரகடனம்.

டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.

TEDMED 2014

டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.
1,110,917 views

டெப்ரா ஜார்விஸ் மருத்துவமனையில் புரோகிதையாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் பணியாற்றி வருகையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நோயாளியாக அவர் நிறையக் கற்றுக் கொண்டார். நகைச்சுவையுடன் கூடிய ஒரு துணிவான சொற்பொழிவில் அவர் எப்படி "புற்று நோயிலிருந்து பிழைத்தவர்" என்ற அடையாளம் நம்மைச் சிறைப்பட்டவராக உணர வைக்கலாம் என்பதை விளக்குகிறார். நம்முடைய கடுமையான அனுபவங்கள் நம் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி தரும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்று என்று கூறுகிறார்.

கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை

TEDMED 2014

கித்ரா கஹானா: என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை
1,152,178 views

2011ல் ரோனி கஹானா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் சிறை வைக்கப்பட்டவர் போலானார்.;கண்களைத் தவிர முழுவதுமாக செயலிழந்தார்.சாதாரணமாக ஒரு மனிதனின் மன நிலையை இது குலைத்துவிடுமானுலும் கஹானோவோ "வெளி அரவங்கள் ஒடுங்கும்போது" ஒரு அமைதியைக் கண்டார்..மேலும் புதிய உடல் மற்றும் வாழக்கையுடன் காதல் கொண்டார்..இந்த சோகமான உணர்ச்சிகரமான சொற்பொழிவில், அவரது மகள் கித்ரா, தன்னுடைய செயலிழந்த நிலையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டி உதவிய தன் தந்தையின் ஆன்மீக அனுபவத்தை எப்படிப் பதிந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்தி

TED@Unilever

மிரியம் சிட்பே: கை கழுவுவதின் அபார சக்தி
1,150,960 views

மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.

கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்து

TED@NYC

கிளின்ட் ஸ்மித்: அமைதியின் ஆபத்து
5,033,082 views

"நாம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவே அதிக நேரத்தை செலவிடுகிறோம் அவர்கள் என்ன சொல்லவில்லை என்பதை மிக அரிதாகவே கவனிக்கிறோம்" என்று புரட்சிக் கவிஞரும் ஆசிரியருமான கிளின்ட் ஸ்மித் கூறுகிறார். அறியாமை மற்றும் அநீதிக்கு எதிராக பேசுவதற்கான தைரியத்தை கண்டுகொள்ள இதயத்திலிருந்து வரும் குறுகிய, சக்திவாய்ந்த பேச்சாகும்.

கேரன் எளாசாரி: ஹேக்கர்கள் : இணையத்தின் நோய் எதிர்ப்பு சக்தி

TED2014

கேரன் எளாசாரி: ஹேக்கர்கள் : இணையத்தின் நோய் எதிர்ப்பு சக்தி
2,591,983 views

ஹேக்கர்களின் சிறப்பு என்ன என்பதை பற்றி மின்வெளி பாதுகாப்பு அதிகாரி கேரன் எளாசாரி விவரிக்கின்றார். ஏக்கர்கள் இணையத்தையும் அதனை பயன்படுதுகின்றவர்களையும் மேம்படுத்த உதவுகின்றனர். சில ஹேக்கர்கள் தவறானவர்கள்தான் ஆனால் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து போராடுகின்ற அதே வேளையில் நமது உரிமைகளுக்கும் குரல் வெளிக்கொடுக்கின்றனர். பலவீனத்தை வெளிப்படுத்துவதின் வழி அவர்கள் இணையத்தை சக்தி வாய்ந்த ஊடகமாக மாற்றி உலக ஏற்றத்திற்கு வித்திடுகின்றனர்

ரே கர்ச்வீல்: கலப்பின சிந்தனைக்கு தயாராகுங்கள்

TED2014

ரே கர்ச்வீல்: கலப்பின சிந்தனைக்கு தயாராகுங்கள்
3,548,296 views

200 மில்லயன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாலூட்டி முன்னோர்கள் மூளையில் ஒரு புதிய அம்சம் தோன்ற காரணமாக இருந்தனர் அது தான் புதிய புறணி .தபால் வில்லை அளவே உள்ள இந்த திசு (வாதுமை கொட்டை அளவே உள்ள மூளையை சுற்றி அமைந்திருக்கும் ) தான் இன்று மனித குலம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு மூல காரணி .எதிர்கால கணிப்பாளர் ரே கர்ச்வீல் மூளையின் திறன் குறித்து வரும் காலங்களில் ஏற்படபோகும் மிக பெரிய எழுச்சிக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேக கணினியின் திறனை நமது மூளை நேரடியாக பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொல்கிறார்.

கெவின் ப்ரிக்க்ஸ்: தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்

TED2014

கெவின் ப்ரிக்க்ஸ்: தற்கொலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான பாலம்
5,482,244 views

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம், இங்குதான் சார்ஜன் கேவின் பிரிக்ஸ் அவர்கள் வேலை செய்தார். இவ்விடம் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புகழ் பெற்ற ஓர் இடம். இங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வாழ்வின் விளிம்பில் நிறபவர்களுடன் பேசி அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி  மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்

TED2014

எலிசபெத் கில்பெர்ட்: வெற்றி, தோல்வி மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்
5,069,463 views

எலிசபெத் கில்பெர்ட் அவர்கள் விருந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த காலத்தில் அவரின் எந்த எழுத்தும் பிரசுரிக்கப் படவில்லை. அது அவருக்கு ஆழமான மனக்கவலையை அளித்தது. Eat, Pray, Love, புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தன்னை தானே அறிந்து கொண்டார். வெற்றியும் தோல்வியைப்போல் தன்னிலை இழக்க வைக்கும் என்றும் ஆயினும் விளைவை பற்றி கவலைக்கொள்ளாமல் தொடர்ந்து செல்வது எப்படி என்று விவரிக்கின்றார்.

TED ஊழியர்: இது TED, இசையில்

TED in the Field

TED ஊழியர்: இது TED, இசையில்
800,223 views

உங்களில் TED பேச்சு மறைந்திருக்கிறதா, முன் வர தயக்கமா? இந்த இசையமைப்பில் ஒரு சுற்றுலாவை காணுங்கள். -TED ஊழியர்களால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டு, நடிக்கப்பட்டது

தாள சத்தம்  துடிப்புக்கு பின்னாலுள்ள கணிதம்

TEDYouth 2013

தாள சத்தம் துடிப்புக்கு பின்னாலுள்ள கணிதம்
1,035,486 views
No Video

உங்கள் இருக்கைகைளில் இருந்து ஆட விருப்பமா? பறை அடிக்கும் கமரன் கிளைத்டன் உங்களுக்கு சங்கீதத்தின் நுட்பங்களை சொல்கிறார் .ரப் இலிருந்து லத்தின்,பொப் அதன் துடிப்பு வரை விளக்குகிறார் . ஹிப் ஹோப்பும் ஜாசும் கணிதத்டைவிட வேடிக்கையானது !! கணிதத்தில் இலகுவாக தங்கியுள்ளது !!

மார்க் கெண்டால்: பாதுகாப்பான மற்றும் மலிவான  ஊசி இல்லாத தடுப்பு  மருந்து உட்கொள்ளும் முறை.

TEDGlobal 2013

மார்க் கெண்டால்: பாதுகாப்பான மற்றும் மலிவான ஊசி இல்லாத தடுப்பு மருந்து உட்கொள்ளும் முறை.
1,079,860 views

ஊசி மற்றும் இறையை கண்டுபிடித்து நூற்று அறுபது ஆண்டுகள் ஆகியும், நாம் இன்னும் தடுப்பு மருந்து வழங்க அவற்றை பயன்படுத்தி வருகிறோம், இது கண்டுபிடிப்பிற்கான நேரம். உயிர்களில் மருத்துவ பொறியாளர் மார்க் கெண்டல் நமக்கு நானோ பாட்ச் என்னும் ஒரு புதிய மருந்து உட்கொள்ள உதவும் கருவியை பற்றி விவர்கிறார். ஒரு சென்டிமீட்டர்க்கு ஒரு சென்டிமீட்டர் சதுர வடிவை கொண்டது.இது வலி இல்லாத ஒரு முறையாகும். இந்த் கண்டுபிடிப்பு இப்போது நாம் பயன்படுத்தும் ஊசியின் நான்கு பெரும் குறைபாடுகளை வெல்ல மிகவும் மலிவான விலையில் உதவுகிறது,

எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள்

TEDWomen 2013

எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுத்து விடாதீர்கள்
5,707,101 views

தனது 64 வயதில், தொடர்ந்து 53 மணி நேரம் நீச்சலிடித்துகொண்டே, கியூபா முதல் ப்ளோரிடா மாகாணம்வரை சென்று சாதனை படைத்த ஒரு பெண்ணின் கதை...

டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்

TEDGlobal 2013

டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்
7,468,760 views

எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக ஒன்று உள்ளது என்றால், அது ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே என்று ஒரு துறவி மற்றும் மதநல்லிணக்க அறிஞர், சகோதரர் டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட் கூறுகிறார். மேலும், அவர் பரிந்துரைக்கும் இந்த சந்தோஷம் நன்றியுள்ள தன்மைவிலிருந்து வருவது.

ஜாரெட் டியமண்ட்: சமூகங்கள் இன்னும் சிறப்பான முறையில் எப்படி மூப்படையலாம்?

TED2013

ஜாரெட் டியமண்ட்: சமூகங்கள் இன்னும் சிறப்பான முறையில் எப்படி மூப்படையலாம்?
1,100,581 views

மனித வாழ்நாட்களை நீடிக்கும் நமது சமீபத்திய முயற்சியில் ஒரு எதிர்பொருள் கொள்ள வேண்டிய பாவனை உள்ளது .இளைஞர்ககளை சார்ந்த ஒரு சமுதாயத்தில் வயதானவர்கள் வாழ்வது உல்லாச பயணம் போவது போன்றது அல்ல .வயதானவர்கள் தனிமைபடுத்தபடலாம் ,வேலையின்மை நிதி பற்றாக்குறை போன்றவைகளும் ஏற்படலாம் .ஆவலை தூண்டும் இந்த சொற்பொழிவில் ஜாரெட் டியமண்ட் பல சமூகங்களில் வயதானவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்த அவரது பார்வையில் அலசுகிறார்.சில நன்றாக உள்ளது சில மோசமாக உள்ளது . ஆனால் வயதானவர்களின் அனுபவ அறிவை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்டீபன் லார்சென்: மருத்துவர்கள் சக மருத்துவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்

TED@BCG Singapore

ஸ்டீபன் லார்சென்: மருத்துவர்கள் சக மருத்துவர்களிடம் இருந்து என்ன கற்று கொள்ளலாம்
887,249 views

வெவ்வேறு மருத்துவமனைகள் வெவ்வேறு விதமான செயமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் நோயாளிகளுக்கு தெரிவதில்லை தரவுகளை பார்ப்பதும் அறுவை சிகிச்சை நிபுணரை தேர்ந்தெடுப்பதும் பணய தொகை அதிகமாக உள்ள ஒரு அனுமானிப்பு விளையாட்டு போல என்பது .ஸ்டீபன் லார்சென், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவர்களது சிகிச்சை முறைகளின் தரத்தையும் பலன்களையும் பகிர்ந்து கொண்டால் எடுத்துகாட்டாக எந்த உத்தி அதிக பலன் அளிக்கக்கூடியது என்பது போன்றவைகள் .உடல் நல பராமரிப்பு இன்னுமும் முன்னேறலாமா ,செலவுகள் இன்னமும் குறையலாமா ,மருத்துவர்கள் சக மருத்துவர்களிட இருந்து கற்று கொண்டால் ,அதாவது ஒரு தொடர் மீள்தரவு வளையம் மூலம்?

க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்

TEDCity2.0

க்றிஸ் டவுனி: பார்வையற்றவர்களை மனதில் கொண்டு வடிவமைத்தல்
1,081,680 views

பார்வையற்றவர்களுக்கான ஒரு நகர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? க்றிஸ் டவுனி ஒரு கட்டிட கலைஞர். திடீரென்று 2008ல் அவர் பார்வை இழந்தார். பார்வை இழந்த பின்பு சான் பிரான்சிஸ்கோவில் அவர் வாழ்ந்ததை பார்வை இருந்த நேரத்தில் நடந்தவைகளோடு ஒப்பிடுகிறார். சிறந்த வடிவமைப்புகள் எப்படி அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது என்று சொல்கிறார். பார்வை இருக்கிறதோ இல்லையோ சிறந்த வடிவமைப்புகள் எப்படி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று சொல்கிறார்.

ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்

TEDGlobal 2013

ஆதர் பென்ஜமின்: ஃபிபோனாச்சி எண்களின் மாயாஜாலம்
7,057,274 views

கணிதம் என்பது தர்க்கரீதியான செயல்பாட்டுக்கு உதவும் ஒரு அற்புதம் ஆகும். கணித மேதை 'ஆதர் பெஞ்ஜமின்', ஃபிபோனாச்சி எண்களில் ஒளிந்துள்ள அற்புதமான பண்புகளை ஆராய்கிறார். (கணிதம் என்பது ஊக்கமளிக்கும் ஒரு சக்தி என்பதை உணர்த்துகிறார்)

மிக்கோ ஹைப்போனென்: NSA எப்படி உலக நம்பிக்கைக்கு  துரோகம் செய்தது  -- இது செயல்படவேண்டிய நேரம்

TEDxBrussels

மிக்கோ ஹைப்போனென்: NSA எப்படி உலக நம்பிக்கைக்கு துரோகம் செய்தது -- இது செயல்படவேண்டிய நேரம்
1,651,014 views

சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா, வெளிநாட்டினர் மீது செய்யும் பொதுப்படையான கண்காணிப்புகளை அடிகோடிட்டு காண்பித்தது. எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்க்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார் . Miko Hypponen சொல்கிறார் இதன் பொருள் என்னெவென்றால் உலகளவில் இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறார்கள் என்பது தான்: உலகின் தகவல் பரிமாற்ற தேவைகளுக்கு அமெரிக்காவை தவிர்த்து ஒரு மாற்று,தேவை என்பது தான்.

ஹால்லி மோர்ரிஸ்: ஏன் செர்னோபிலில் தங்கி  இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .

TEDGlobal 2013

ஹால்லி மோர்ரிஸ்: ஏன் செர்னோபிலில் தங்கி இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .
1,157,051 views

செர்நோபில், உலகின் மிகவும் மோசமான அணு உலை விபத்து, 27 ஆண்டுகளாக, அந்த உலையை சுற்றியுள்ள இடங்கள் தவிற்க்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளன. ஆயினும், 200 பேருக்கு மேல் அங்கு வசிக்கிறார்கள் -- ஏறக்குறைய அனைவருமே பெண்களே. இந்த பெருமையான பாட்டிமார்கள் பல உத்தரவுகளை மீறியும், கதிர்வீச்சு இருப்பினும், தங்களது உறைவிடம் மற்றும் சமூகத்தைவிட்டு இடம்பெயராது இருக்கிறார்கள்.

மைக்கல் செண்டல்: நம்முடைய சமூக வாழ்வில் ஏன் சந்தையை நம்பக்கூடாது

TEDGlobal 2013

மைக்கல் செண்டல்: நம்முடைய சமூக வாழ்வில் ஏன் சந்தையை நம்பக்கூடாது
2,044,888 views

மைக்கல் செண்டலின் கூற்றின் படி கடந்த முப்பது ஆண்டுகளில், அமெரிக்கா சந்தை பொருளியலிலிருந்து சமூக பொருளியலாக மாறிவருகிறது. அவர்களின் சமூக வாழ்க்கை அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றார்களோ அதனை ஒட்டியே அமைகிறது.( மூன்று முக்கிய எடுத்துக்காட்டுகள்: கல்விக்கான வாய்ப்பு, நீதிக்கான வாய்ப்பு, அரசியல் செல்வாக்கு.) வருகையாளர்களுடனான கலந்துரையாடலில், செண்டல் நம்மை உண்மையை மறைக்காமல் நேர்மையுடன் இந்த கேள்வியை யோசிக்கச் சொல்கிறார். நம்முடைய மக்களாட்சி முறையில் , பெரும்பாலானவற்றை விற்பனை செய்கிறோமா ?

Jinsop Lee: ஐம்புலங்களுக்கான வடிவமைப்பு

TED2013

Jinsop Lee: ஐம்புலங்களுக்கான வடிவமைப்பு
1,663,871 views

ஆம், நல்ல வடிவமைப்பு பார்க்க நலமாயிருக்கும்-- அது ஏன் உணர, முகர, கேட்க நலமாயிருக்கக்கூடாது? வடிவமைப்பாலர் ஜின்சாப் லீ(TED Talent Search Winner) அவருடைய 5 புலன்கள் (உணர்வுகள்) வடிவமைப்பு முறையை சில எடுத்துக்காட்டுகள் மற்றும் வரைபடங்களுடன் பகிர்கிறார். அவருடைய எதிர்பார்ப்பு: நீங்கள் சிறந்த பல-உணர்வு அனுபவங்களை கவனிக்க ஊக்குவிக்கவேண்டும் என்பதே.

Dong Woo Jang: வில் செய்வதற்கான கலை

TED2013

Dong Woo Jang: வில் செய்வதற்கான கலை
2,472,005 views

டோங் வூ ஜாங் விசித்திரமான பொழுதுப் போக்கை கொண்டிருந்தார். இந்த உரையினை வழங்கும்பொழுது அவருக்கு 15 வயது. அவர் சியோலின் கட்டிட காடுகள் வாழும்பொழுது சிறந்த வில் செய்வதற்கு எப்படி ஊக்கம் வந்தது எனக் கூறுகின்றார். அவர் சொந்தமாக வடிவமைத்த வில்லினையும் அம்பினையும் பாருங்கள், கேளுங்கள்.

Lisa Bu: லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றன

TED2013

Lisa Bu: லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றன
4,963,279 views

நீங்கள் சிறு வயது முதல் கண்ட கனவு நினைவாகாமல் இருந்தால் என்னவாகும்? லிசா பு அமெரிக்காவில் தன்னுடைய புது வாழ்க்கைக்கு மாறிய பிறகு, அவர்கள் புத்தகங்கள் பக்கம் சென்று தன்னுடைய மனதை வெளிப்படுத்தி தனக்கென்று புது பாதையை உருவாக்கினார்கள். அவர்கள் புத்தகங்களை படிக்கும் தனது தனித்தன்மை கொண்ட அணுகுமுறையை, புத்தகங்களின் மந்திரம் பற்றிய தன்னுடைய அழகான பேச்சின் மூலம் பகிர்ந்து அளிக்கிறார்.

செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.

TED2013

செர்கே பிரின்: ஏன் கூகிள் கிளாஸ்.
2,115,013 views

இது செயல்முறையல்ல, ஒரு தத்துவார்த்தமான வாதம் : ஏன் செர்கே ப்ரின்னும் அவரின் குழுவும் கண்ணருகே பொருத்தப்பட்ட புகைப்படக்கருவி/கணினியை கூகிளில் செய்ய விழைந்தார்கள் ? டெட்2013 மேடையில் நமக்கும் நம்முடைய கணினிகளுக்குமிடையில் உள்ளத் தொடர்பைப் புதியகோணத்தில் காண அழைக்கிறாய்--ஒரு திரையின் மேல் சாய்ந்துகொண்டல்லாமல் தலை நிமிர்ந்து உலகை நோக்கிகொண்டு.

ஷோழன்: ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!

TED2013

ஷோழன்: ஷோழன் ஹுஷே: எளிதாய் சீன மொழியை கற்றுக்கொள்ள!
4,781,742 views

வெளிநாட்டவர்களுக்கு சீன மொழியில் பேசுவது என்பது கடினம். ஆனால் அழகான சீன மொழியை கற்றுகொள்வது சுலபம். ஷோழன் நமக்கு எளிதான முறையையும் அதன் அர்த்தங்களையும் மிகவும் எளிதான முறையில் சொல்லித்தருகிறார். எளிதான சீன மொழி!

நேரத்தை மிச்சப்படுத்த 10 தொழில்நுட்ப குறிப்புகள்

TED2013

நேரத்தை மிச்சப்படுத்த 10 தொழில்நுட்ப குறிப்புகள்
5,098,535 views

இந்த டேவிட் ஃபோக்கின் (David Pogue) ஒலிக்கோப்பை உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த தேவையான 10 தொழில்நுட்ப குறிப்புகளை அறிமுகம் செய்கிறது. இதில் சிலவற்றை நீங்கள் முன்பே அறிந்திருந்தாலும் ஒரு சில கண்டிப்பாக புதிதாக இருக்கும்.

பவோலோ கார்டினி: பல்பணியை மறந்து, ஒருபணியை முயற்சித்தல்

TEDGlobal 2012

பவோலோ கார்டினி: பல்பணியை மறந்து, ஒருபணியை முயற்சித்தல்
2,609,537 views

மக்கள் சமைப்பது மட்டுமில்லை -- அவர்கள் சமைக்கிறார்கள், குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள், தொலைபேசியில் பேசுகிறார்கள், யூடீயுபில் காணொளியைப் பார்க்கிறார்கள், கூடவே தாங்கள் செய்த உணவின் புகைப்படங்களை தரவேற்றுகின்றனர். பவோலோ கார்டினி என்ற வடிவமைப்பாளர் பல்பணி உலகத்தை ஒப்பிட்டு, ஒருபணியை அறிமுகப்படுத்துகிறார். அவரது முப்பரிமாண விவேக கைப்பேசி அதற்கு உதவுகிறது.

Amy Cuddy: எமி கடி: உங்கள் தோற்ற அமைவு உங்களை உருவாக்குகிறது

TEDGlobal 2012

Amy Cuddy: எமி கடி: உங்கள் தோற்ற அமைவு உங்களை உருவாக்குகிறது
56,233,256 views

உடல் தோற்ற அமைவு மற்றவர் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதுடன், நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதையும் மாற்றக்கூடியது. சமூக உளவியலாளர் எமி கடி "ஆளுமைத்தனம் கொண்ட தோற்றங்கள்" -- நம்பிக்கையற்று இருக்கும்போழுதும், நம்பிக்கையுடன் நிற்பது போன்ற தோற்ற அமைவு -- உங்களது மூளையின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கார்டிசோல் அளவை மாற்றுவதுடன், உங்கள் வெற்றியிலும் ஒரு பங்காற்ற முடியும் என்று நிரூபிக்கிறார்.

Marc Goodman: மார்க் குட்மேன்: வருங்காலத்தில் குற்றங்களின் நிலையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை.

TEDGlobal 2012

Marc Goodman: மார்க் குட்மேன்: வருங்காலத்தில் குற்றங்களின் நிலையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை.
1,375,322 views

உலக நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக மாறுவதன் விளைவாக, எதிர்காலம் பிரகாசமாகவும் ஆபத்து நிறைந்தாதாகவும் மாறுகிறது. மார்க் குட்மேன் விவரிக்கும் ஆபத்து நிறைந்த வருங்காலத்தில், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் குற்றங்கள் மோசமாக வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.